தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் 31 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு, 22 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி- மாவட்ட ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் 31 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு, 22 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி- மாவட்ட ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வேட்பு மனு கூர்ந்தாய்வில் 31 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முழுமையான விவரங்கள் குறிப்பிடப்படாத 22 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையம் 16.03.2024 அன்று பிற்பகல் 03.00 மணியளவில் தேர்தல் அறிவிப்பினை வெளியிட்டதை தொடர்ந்து 36 தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் அறிவிப்பு 16.03.2024 (சனிக்கிழமை) அன்று தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி. வெளியிடப்பட்டது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய குறிப்பிடப்பட்ட நாட்களான 20.03.2024 முதல் 27.03.2024 அன்று பிற்பகல் 03.00 மணி வரை 53 வேட்பு மனுக்கள் வேட்பாளர்களிடமிருந்து பெறப்பட்டன.

இந்த வேட்பு மனுக்கள் 28.03.2024 அன்று தேர்தல் பொது பார்வையாளர் திரு.திவேஷ் ஷெஹரா, முன்னிலையில் தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி கூர்ந்தாய்வு செய்யப்பட்டது. வேட்பு மனுக்கள் கூர்ந்தாய்வின் போது வேட்பாளர் மற்றும் அவரது முகவர்கள் கலந்து கொண்டனர். வேட்பு மனு கூர்ந்தாய்வில் 31 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 22 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான காரணம் சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கு உடன் தெரிவிக்கப்பட்டது. கூர்ந்தாய்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்களை 30.03.2024 அன்று (சனிக்கிழமை) பிற்பகல் 03.00 மணி வரை எழுத்துபூர்வமாக தெரிவித்து வாபஸ் பெற்றுக்கொள்ளலாம் என தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )