தூத்துக்குடி ரோச் பூங்காவில் நடைபயிற்சிக்கு வந்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி வாக்கு சேகாித்தார்

தூத்துக்குடி ரோச் பூங்காவில் நடைபயிற்சிக்கு வந்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி வாக்கு சேகாித்தார்

தூத்துக்குடி ரோச் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்களிடம் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி வாக்கு சேகரித்தார். தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சிவசாமி வேலுமணியை ஆதரித்து தூத்துக்குடியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். இதனையடுத்து கடற்கரை சாலையில் உள்ள ரோச் பூங்காவில் நடைபயிற்சிக்கு வந்த பொதுமக்களிடமும், அப்பகுதியில் கிாிக்கெட் விளையாடிய இளைஞர்களிடமோ அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி வாக்கு சேகாித்து அவர்களிடம் கூறுகையில் இந்த மாவட்டத்தை சேர்ந்த எனக்கு ஆதரவு தர வேண்டும். எல்லா வகையிலும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு முழுமையாக என்னை அர்ப்பனித்துக்கொண்டு பணியாற்றுவேன் என்று கூறினார்.

அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன், மாவட்ட ஜெ பேரவை இணைச்செயலாளர் ஜீவா பாண்டியன், திருமண்டல பெருமன்ற உறுப்பினர் பிரபாகா், உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )