
தேர்தல் நேரத்தில் நாடகமாடும் அதிமுக பிஜேபிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்- தோ்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதித்து முல்லைக்காடு, முத்தையாபுரம், பொட்டல்காடு, பொியசாமிநகர், எம்.ஜி.ஆா்நகர், சத்யாநகர், ராஜபாண்டி நாகா, ஆகிய பகுதிகளில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநல அமைச்சருமான கீதாஜீவன்,
திமுக ஆட்சி அமைந்தபின் கலைஞர் வழியில் தளபதியார் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக செய்து வருகிறார். ஆனால் தமிழகத்திற்கு எதிரான நீட் தேர்வு குடியுரிமை சட்டம் உணவு பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பலசட்டங்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி தலையாட்டி பொம்மையாக இருந்து ஆதரித்தார். இப்போது பிஜேபியுடன் தொடர்பு இல்லை என்று சொல்லி இரண்டு பேருமே நாடகமாடி மக்களை ஏமாற்றுவார்கள் அதற்கு இடம் அளிக்க கூடாது, நமது ஆட்சியின் சாதனைகளை வீடுகள் தோறும் எடுத்துச்சென்று கட்சிக்கும் ஆட்சிக்கும் வலிமை சேர்க்க வேண்டும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை எதிர்த்து நிற்கும் கட்சிகளுக்கு டெபாசிட் கிடைக்க கூடாது. அந்த அளவிற்கு உங்களது களப்பணிகள் சிறப்பாக அமைய வேண்டும்.
அனைத்து அணிகளும் ஓட்டு மொத்தமாக இணைந்து பணியாற்ற வேண்டும். வரும் நாடாளுமன்ற தோத்தலில் கனிமொழி எம்.பி மீண்டும் போட்டியிடுகிறார்கள். கடந்த முறை பெற்ற வெற்றியை விட இந்த முறை மிகப்பொிய வெற்றியை விட 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஈட்டி தருவதற்கு முதல்வாின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் அதே போல் கடந்த ஆண்டு எதிர்பாராமல் பெய்த கனமழையால் ஏற்பட்ட வௌ்ள பாதிப்பின் போது அனைத்து தரப்பினருக்கும் நாம் ஓவ்வொரு வகையிலும் உதவிகள் செய்து மக்கள் நலன் தான் முக்கியம் என்று பணியாற்றியுள்ளோம். என்பது பொதுமக்களுக்கு எதாயும் அதிமுக பிஜேபி கட்சிகளுக்கு வரும் தோ்தலில் சாமியானா பாடம் புகட்ட வேண்டும் என்று பேசினார்.
மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் சண்முகம், சிபிஎம் செயற்குழு உறுப்பினர் அர்ஜீனன், மாநகர மதிமுக செயலாளர் முருகபூபதி, மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், மாநகர திமுக இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், இளஞரை அணி அமைப்பாளர் முத்து, அருண்சுந்தர், கவுன்சிலர்கள் , பட்சிராஜ், சுயம்பு, வட்டச்செயலாளர் முகையா, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மதிமுக மாவட்ட இளைஞர் அணி செயலாளர்கள் சரவணபெருமாள், பாலசுப்பிரமணியன், பகுதி செயலாளர் பொன்ராஜ், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, மற்றும் மணி, அல்பட், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.