
முன்னறிப்பு இன்றி, தூத்துக்குடியில் தொடரும் மின்வெட்டு – பரிட்சை எழுதும் பள்ளி மாணவ, மாணவிகள் அவதி- தேர்தல் நேரத்தில் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கமா.?.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26ந்தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.
பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் இரவு பகல் பாராமல் பரிட்சைக்கு தயாராகிக் வருகின்றனர்.
இந்நிலையில் தேர்வு ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை தூத்துக்குடி பகுதிகளில் முன்னறிவிப்பு இல்லாத தொடர் மின்தடை ஏற்பட்டு வருகிறது.
இதனால் பரீட்சைக்கு தயாராகும் பள்ளி மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த மின்தடை இரவிலும் தொடர்வதால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
தற்போது வெயில் காலம் என்பதால் தூத்துக்குடியில் வெப்பம் அதிகரித்த காணப்படும் நிலையில், தொடர் மின்தடையால் தூத்துக்குடி மக்கள் மற்றும் பரீட்சை எழுதும் பள்ளி மாண, மாணவிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
சமூக அக்கறை கொண்டவர்கள் என்று கூறிக் கொள்ளும் அரசியல் கட்சியை சார்ந்த நபர்களோ,!. மற்றும் அமைப்பை சேர்ந்த நபர்களோ இதை தட்டிக் கேட்கவோ, சரி செய்யவோ முன்வரவில்லை.
தேர்தல் பிரச்சாரத்தில் பிசியாக இருப்பவர்கள் மக்கள் பிரச்சினையை கண்டு கொள்ளாதது வருத்தம் அளிப்பதாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
மேலும், தேர்தல் நேரத்தில் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் மின்வாரியம் தமிழக அரசுக்கு எதிராக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதன் மீது நடவடிக்கை மேற்கொண்டு மாணவ, மாணவிகள் பரீட்சை எழுதுவதற்கு இடையூறு இல்லாமல் தடையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கிட வேண்டுமென பெற்றோர்கள், பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.