
திருச்செந்தூர் முருகன் கோயிலில் தவறவிட்ட தங்க கைச்செயின் – எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த வியாபாரி
தூ த்துக்குடி மாவட்டம் ஏரல், வாலவல்லான் பகுதியைச் சேர்ந்த புதுமண தம்பதியினர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இன்று தரிசனம் செய்ய வந்தபோது கைச்செயின் தவறவிட்டதை திருச்செந்தூர் மணல்மேடு பகுதியைச் சேர்ந்த வியாபாரி பலவேசக்கண்ணன் என்பவர் திருக்கோவில் அலுவலகத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து அலுவலக ஊழியர்கள் ஒலிபெருக்கி வாயிலாக கைச்செயினை தவறவிட்டது குறித்து பக்தர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பால்ராஜ், இசக்கிபிரியா தம்பதியினர் அலுவலகத்திற்கு வந்து தவறவிட்ட கைச்செயினின் அடையாளத்தை தெரிவித்ததையடுத்து செயின் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கைச்செயினை எடுத்து நேர்மையுடன் ஒப்படைத்த பலவேசகண்ணனுக்கு புதுமண தம்பதியினர் மற்றும் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
CATEGORIES மாவட்டம்