மண்ணின் மைந்தனாகிய எனக்கு ஆதரவு கொடுங்க – தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி காய்கறி விற்று பிரச்சாரம் செய்தார்

மண்ணின் மைந்தனாகிய எனக்கு ஆதரவு கொடுங்க – தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி காய்கறி விற்று பிரச்சாரம் செய்தார்

தூத்துக்குடி வருகிற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளராக சிவசாமி வேலுமணி களமிறங்கியுள்ள நிலையில் தீவிரமான வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகளுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வரும் நிலையில், தூத்துக்குடி காய்கனி மாா்க்கெட்டுக்கு சென்று ஓவ்வொரு கடையாக பார்வையிட்டு வியாபாாிகளிடம் நலம் விசாாித்தும் சரக்கு கொள்முதல், விற்பனை, உள்ளிட்ட பல கருத்துக்களையும் பாிமாறி பொதுமக்களிடம் வாக்கு சேகாித்தார். பின்னர் காய்கனி விற்று பொதுமக்களிடம் ஓட்டு சேகாித்தார். மண்ணின் மைந்தனாகிய எனக்கு ஆதரவு கொடுங்க என்னை எப்போதும் வேண்டுமானாலும் எளிய முறையில் தொடா்பு கொண்டு குறைகளை தொிவிக்கலாம், நான் வெற்றி பெற்றால் மக்களோடு மக்களாகன பணியாற்றுவேன் என வேட்பாளர் சிவசாமி வேலுமணி தொிவித்தார்.

நிகழ்வில், முன்னாள் அமைச்சரும், மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன், அமைப்பு சாரா ஓட்டுநரணி துணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட அமைப்புசாரா அணி செயலாளர் சுதாகர், மாவட்ட சிறுபான்மை அணி செயலாளர் பிரபாகர், இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ், மாவட்ட ஜெ.பேரவை துணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம், திருமண்டல பெருமன்ற உறுப்பினர் பிரபாகர், வட்டச்செயலாளர்கள் அருண்குமார், மில்லை ராஜா, அவைத்தலைவர் வக்கீல் குமார், மற்றும் ஜோசப், உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )