
விளையாட்டு போட்டியில் தூத்துக்குடி மாணவி சாதனை- அமைச்சர் கீதாஜீவன் பாராட்டு
தூத்துக்குடி சர்வதேச அளவிலான பாரா தடகள விளையாட்டு போட்டி கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நடைபெற்றது. நேபால், கஜகசஸ்தான், மங்கோலியா, ஸ்ரீலங்கா, லஞ்ச், ப்ளீஸ், கென்யா, போன்ற 20க்கும் மேற்பட்ட நாட்டிலிருந்து கலந்து கொண்டனர். இதில் இந்தியா சார்பாக 50க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டார்கள். தமிழகத்தில் இருந்து 21 பேர் கலந்து கொண்டனர்.
போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த மாணவி முத்துமீனா f20 கேட்ட கிரியில் குண்டு எறிதலில் முதல் இடம் பிடித்து இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். இவர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஐீவன் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றாா்.
அப்போது அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில் ஆர்வமுடன் விளையாட்டு துறையில் பங்கேற்று விளையாட வேண்டும். அதற்கு தமிழக அரசும் நானும் தேவையான உதவிகளை நிச்சயம் செய்து கொடுப்போம். என்று தொிவித்தார்.
மாணவர்கள் வெற்றிக்கு உதவிய தமிழ்நாடு பாரா விளையாட்டு சங்க தலைவர் சந்திரசேகர், செயலாளர் கிருபாகரன் ராஜா, பொருளாளர் கிருஷ்ணா, பயிற்சியாளா் விஜய் சாரதி, சங்க நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.