தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் 28 வேட்பாளர்கள் போட்டி- தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான லட்சுமிபதி தகவல்

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் 28 வேட்பாளர்கள் போட்டி- தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான லட்சுமிபதி தகவல்

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் 28 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

36 தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு 20.03.2024 முதல் 27.03.2024 அன்று பிற்பகல் 3.00 மணி வரை 53 வேட்பு மனுக்கள் வேட்பாளர்களிடமிருந்து வரப்பட்டு 28.03.2024 அன்று தேர்தல் பொது பார்வையாளர் திவேஷ் ஷெஹரா, இ.ஆ.ப., முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தேர்தல் நடத்தும் அலுவலர் தலைவர் கோ.லட்சுமிபதி, இ.ஆ.ப. கூர்ந்தாய்வு செய்யப்பட்டது. இதில் 31 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இன்று 30.03.2024 பிற்பகல் 3.00 மணி வரை வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, பிற்பகல் 3.00 மணி வரை 3 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் பொது பார்வையாளர் திவேஷ் ஷெஹரா, முன்னிலையில் தூத்துக்குடி பாராளுமன்றத் தலைவர் கோ./ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ. , தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் 28 வேட்பாளர்களுக்கு சின்னங்களை ஒதுக்கினார். இந்தத் தேர்தலில் 03 பெண்கள் 25 ஆண்கள் உட்பட 28 பேர் போட்டியிடுகின்றனர்.

அதனைத்தொடர்ந்து, தேர்தல் பொது பார்வையாளர் முன்னிலையில் தூத்துக்குடி பாரளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் மரு.எஸ்.எஸ்.ஸ்ரீஜூ, இ.வ.ப., அஜய் ரூமல் கர்டே, இ.வ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
முனைவர்.லோக.பாலாஜி சரவணன், வாக்காளர் பதிவு அலுவலர்/தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், இ.ஆ.ப. ., மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி உதவி தேர்தல் அலுவலர்/வருவாய் கோட்டாட்சியர் பிரபு, வேட்பாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )