
தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் 1 நிமிடம் தற்காலிகமாக நின்று செல்லும்
மூத்த குடிமக்கள் நலனுக்காக தூத்துக்குடி யார்டில் லைன் பிளாக் காரணமாக 02.04.2024 முதல் 16.04.2024 வரை பின்வரும் ரயில்கள் தூத்துக்குடி மேலூர் ஹால்ட் நிலையத்தில் ஒரு நிமிடம் தற்காலிகமாக நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி
வண்டி எண் 12694 சென்னை எக்மோர்- முத்துநகர் எக்ஸ்பிரஸ் : 02/04/2024 முதல் 16/04/2024 வரை இரவு 8.30 – 8:31 வரையும்,
வண்டி எண் 16236 : மைசூர் – தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் : 02.04.2024 முதல் 15.04.2024 வரை – காலை 9:59- 10:00 வரையும்,
வண்டி எண்: 16235 தூத்துக்குடி- மைசூர் எக்ஸ்பிரஸ் : 02.04.2024– 16.04.2024 வரை மாலை 5.20 – 5.21 வரையும் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
CATEGORIES மாவட்டம்