
பராமரிப்பு பணிகள் காரணமாக தூத்துக்குடி ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம்- தெற்கு ரயில்வே அறிவிப்பு
மதுரை கோட்டப்பகுதியில் ஏப்ரல் மாதத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 14 வரை தூத்துக்குடியில் இருந்து மாலை 06.25 மணிக்கு புறப்பட வேண்டிய தூத்துக்குடி – திருநெல்வேலி ரயில் (06667) மற்றும் திருநெல்வேலியில் இருந்து காலை 07.35 மணிக்கு புறப்பட வேண்டிய திருநெல்வேலி – தூத்துக்குடி ரயில் (06668) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
ஏப்ரல் 22 அன்று திருநெல்வேலி – பாலக்காடு – திருநெல்வேலி ரயில்கள் (16791/16792) கொல்லம் – திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
ஏப்ரல் 7 மற்றும் ஏப்ரல் 14 ஆகிய நாட்களில் தூத்துக்குடியில் இருந்து இரவு 11.35 மணிக்கு புறப்பட வேண்டிய ஒஹா விரைவு ரயில் ஏப்ரல் 8 மற்றும் ஏப்ரல் 15 அன்று அதிகாலை 01.30 மணிக்கு 115 நிமிடங்கள் கால தாமதமாக புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.