திராவிடர் கழக மாநில தலைவர் கி.வீரமணி

திராவிடர் கழக மாநில தலைவர் கி.வீரமணி

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதியை ஆதாித்து திராவிடர் கழகம் சார்பில் சிதம்பரநகர் விலக்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முனியசாமி தலைமை வகித்தார். மாவட்ட காப்பாளர்கள் பால்ராசேந்திரம், காசி, பகுத்தறிவு கழக மாவட்ட தலைவர் வெங்கட்ராமன், மாவட்ட செயலாளர் பொன்ராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழக மாவட்ட செயலாளர் முருகன் வரவேற்புரையாற்றினார்.

திராவிடர் கழக மாநில தலைவர் கி.வீரமணி பேசுகையில் தந்தை பொியார் காலத்தில் கூட்டத்திற்கு மக்கள் வரவில்லை என்பதைப்பற்றி கவலைப்டாமல் குறைவானவர்கள் வந்தாலும் நாம் சாியான நேரத்திற்கு செல்ல வேண்டும் நமது கொள்கைகள் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் பணியாற்றினார். அவரது வழியில் நாம் பயணிக்கிறோம். 10வயது மாணவ பருவ முதல் 80 ஆண்டுகாலம் பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளேன்.

இப்போது சந்திக்கும் பொதுத்தேர்தல் 18வது தேர்தல் மற்ற தேர்தலை காட்டிலும் இது வித்தியாசமான தேர்தல் காரணம் வௌ்ளைக்காரன் காலத்தில் நடைமுறைகள் வித்தியாசமாக இருந்தன. 1952ல் நடந்த தேர்தலில் மஞ்சப்பெட்டி பச்சைபெட்டி என்று வைக்கப்பட்டு தோ்தலை சந்தித்த போது பசுமையான நாட்டின் வளர்ச்சிக்கு பச்சைபெட்டியில் வாக்களியுங்கள் என்ற காலம் உண்டு. அப்போதைய காலக்கட்டத்தில் வேட்பாளர்கள் அதிகம் தேர்தல் பக்கம் வரமாட்டார்கள். இப்போது ஜனநாயகத்தை பாதுகாக்க வரும் 19ம் தேதி நடைபெறுகின்ற தேர்தலில் நாட்டை காப்பாற்ற வேண்டிய கடமைகளில் நாம் இருக்கிறோம் மீண்டும் கார்ப்பரேட் நிறுவனங்கள் உயர் ஜாதியினருக்கு வாய்ப்பளித்து விடக்கூடாது. சமூகநீதி ஆட்சி மலர வேண்டும். பாஜக ஆர்எஸ்எஸ் மதவெறி மூலம் ஓரே நாடு ஓரே தோ்தல் என்பதற்கு முற்றுப்புள்ள வைக்க வேண்டும். அண்ணல் அம்பேத்கா் சட்டம் இயற்றிய போது 6 பேர் இருந்த அந்த குழுவில் நான்கு பேர் உயர்ஜாதியினர் ஓருவர் இஸ்ஸாமியர் அந்த நெருக்கடி சூழ்நிலையில் இயற்றிய சட்டத்தின் மூலம் மக்களாட்சி நடைபெறுகின்ற இறையான்மையை சீர்குலைக்க பிரதமர் மோடி பல்வேறு உத்திகளையும் கையாண்டு வருகிறார். சில இடங்களில் இருக்கும் புத்தகங்களில் கரையான் அறித்து அதன் உள்ள இருக்கும் தாள்கள் அனைத்தும் சேதமடைந்து அட்டை மட்டும் தான் இருக்கும் அது போல் தான் இவரது ஆட்சியும் இருக்கிறது. 140 கோடி இந்தியர்களுக்கும் நான் பாதுகாவலன் என்று கூறி கொள்ளும் மோடி இந்தியாவில் உள்ள மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கொடூர சம்பவங்களை போய் பார்ப்பதற்கு செல்லவில்லை. ஆனால் உலகநாடுகள் முழுவதும் சுற்றி வருகிறார். ஏன் தமிழ்நாட்டில் சென்னை தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட கடுமையான மழை வௌ்ள பாதிப்பின் போது எட்டி பார்க்கவேயில்லை. ஆனால் ஓன்றிய அரசு அதிகாாிகள் அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத்சிங், வந்து பார்வையிட்டு சென்றும் நிதி வழங்கவில்லை.

முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆகியோர் நோில் சந்தித்தும் நிதி வழங்கவில்லை. டி.ஆர்.பாலு எம்.பி தலைமையில் கூட்டணி கட்சி எம்.பிக்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து கோாிக்கை வைத்தனர். வரும் என்று சொன்னார்கள். ஆனால் காமெடி நடிகர் வடிவேலு பாணியில் சொல்ல வேண்டும் என்றால் வரும் ஆனால் வராது. கதையாகி விட்டது. இப்போது முதலமைச்சர் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார். பிரதமர் மோடி மிகப்பொிய மகாநடிகர், 2014ல் தேர்தலின் போது ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்குவேன் என்று சொன்னார். ஆனால் 10 ஆண்டுகளில் 20 கோடிபேருக்கு வேலை வழங்கியிருக்க வேண்டும் வழங்கினாரா இல்லையே? கருப்பு பணத்தை மீட்டு ஓவ்வொருவருடைய கணக்கிலும் 15 லட்சம் வழங்குவேன் என்று சொல்லி ஏழை எளிய குடும்பத்தினர் உள்பட பலரையும் வங்கி கணக்கு தொடங்க சொல்லி அவா்களிடம் இருந்த பணத்தை இழந்தது தான் மிச்சம், திடிரென 2000 1000 பணம் செல்லாது அறிவிப்பின் மூலம் பொருளாதார வீழ்ச்சி ஏழைகளின் கஷ்டத்தை பற்றி தொியாத பிரதமர் இவரது ஆட்சியில் வளர்ச்சி என்பதை விட வீழ்ச்சிதான் அதிகம் பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் எதிர்த்து குரல் கொடுத்து கேள்வி கேட்டால் வரலாற்று சாதனையாக 146பேரை இடைநீக்கம் செய்தனர். சட்டம் ஓழுங்கு காப்பாற்ற வேண்டிய இந்த அரசு குஜராத் அதாணி துறைமுகத்திலிருந்து பல்வேறு வகையான போதை பொருட்கள் இந்தியா முழுவதும் செல்கின்றன. இதை கட்டுப்படுத்த முடியவில்லை விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் அவர்களது கோாிக்கை நிறைவேறவில்லை. இங்கு அண்ணாமலை என்று ஓருவர் இருக்கிறார். அவருக்கு என்ன வரலாறு தொியும் தினமும் ஓரு பொய்ைய சொல்லி திாிகிறார். இந்தியாவில் வேலை வாய்ப்பை உருவாக்காமல் பொய் செய்திகளை பரப்பும் தொழிற்சாலையை மோடி ஆரம்பித்துள்ளார். தென் தமிழகம் வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இந்தியாவில் மிகப்பொிய திட்டமான சேது சமுத்திர திட்டம் தொடங்கப்பட்டு அதற்கு கப்பல் துறை அமைச்சராக டிஆர் பாலு நியமணம் செய்யப்பட்டு அந்த திட்டம் நடைபெற்ற வந்த சூழ்நிலையில் தேர்தல் காலமும் நெருங்கியதால் 13 கிலோ மீட்டர் தூரத்தில் முடிக்க வேண்டிய நேரத்தில் ராமர் இங்கு வந்து சென்றார். என்று முடக்கப்பட்டு கலைஞரின் தொலை நோக்கு திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டது பிஜேபி அரசு இந்தியா கூட்டணி இந்தியா முழுவதும் வெல்ல வேண்டும். சில மாதங்களுக்கு முன்பு 400 தொகுதிகளை வெல்வோம் என்று சொன்னவர்கள் தற்போது எல்லாம் மாறிப்போய் கிடைக்கிறது. மோடி ஆட்சியில் எல்லோருக்கும் வேதனை தான் மிட்சம் தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சியில் புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் வகையில் 30 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்ற உத்திரவாத்துடன் தேர்தல் அறிக்கையில் கொடுத்துள்ள அறிவிப்புகள் அனைத்தும் முத்தான திட்டங்கள் இவை அணைத்தும் நிறைவேற்றப்படும் என்ற உறுதியோடு தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி களம் காண்கிறது. இந்த மாவட்டத்தில் பெய்த கனமழையின் காலத்தின் போது முட்டளவு தண்ணீர் சென்ற போது அதிலும் சென்று பணியாற்றிய அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி ஆகியோரை மனதார பாராட்டுகிறேன் உங்களுக்கு பணியாற்றி கவிஞர் கனிமொழிக்கு உதயசூாியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். என்று பேசினார்.

கூட்டத்தில் திராவிடர் கழக பொதுச்செயலாளா் துரை சந்திரசேகரன், நிர்வாகிகள் பொியார் தாசன், கலைமணி, ஆழ்வார், வள்ளி, அன்பழகன், கார்த்திகேயன், பாலமுருகன், சேகர், திருமலை குமரேசன், மதிவாணன், ஜெயா, புத்தன், செல்லத்துரை, ஆதிதமிழர்கட்சி மாவட்ட செயலாளர் நம்பிராஜ் பாண்டியன், மனிதநேய மக்கள் கட்சி பொறுப்பாளர் அகமது இக்பால், மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, இளைஞர் அணி செயலாளர் சரவணபெருமாள், நிா்வாகிகள் நக்கீரன், சரவணன், முருகேசன், திமுக பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், வட்டச்செயலாளர் சுப்பையா, உள்பட பலா் கலந்து கொண்டனர். மாநகர திராவிடர் கழக மாணவரணி தலைவர் திரவியம் நன்றியுரையாற்றினார்.
பாக்ஸ்: மணிப்பூர் சம்பவத்தின் போது ராகுல்காந்தி, கனிமொழி எம்.பி, திருமாவளவன், உள்ளிட்ட இந்தியா கூட்டணியை சேர்ந்த பல தலைவர்கள் நோில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்கள். மோடிக்கு அங்கு செல்வதற்குமட்டும் நேரம் கிடைக்க வில்லை. ஜீன் 3ம் தேதி முத்தமிழ் அறிஞர் கலைஞாின் 100வது பிறந்தநாள் விழா உள்ள நிலையில் ஜீன் 5ம் தேதி பிரதமர் மோடிக்கு வழியனுப்பும் விழாவும் புதிய இந்தியாவை வழிநடத்தும் அரசு அமையும் விழாவும் நடைபெறும் என்று கி.வீரமணி கூறினார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )