
தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தில் இப்தார்நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக சங்க கூட்ட அரங்கில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் வர்த்தக சங்கத் தலைவர் டி ஆர்.தமிழரசு அனைவரையும் வரவேற்றுப் பேசினார சங்கப் பொதுச் செயலாளர் .சங்கர் மாரிமுத்து, முன்னாள் தலைவர் .ஜோ பிரகாஷ் துணைத் தலைவர் பிரேம் வெற்றி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டதூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் தலைவர் மீராசா மரைக்காயர், தூத்துக்குடி பரிசுத்த பனிமய மாதா போராலய பங்கு தந்தை குமாரராஜா, வேதசிவாகம பள்ளி ஆசிரியர் சிவஸ்ரீ சங்கர நாராயணன் சிவம், தூத்துக்குடி மாவட்ட அரசு ஹாஜி பொருளாளர் .முஜிபூர் ரஹ்மான் ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் அலீம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
சிறப்பு விருந்தினர்களது சிறப்புரையில், தூத்துக்குடி இந்திய வர்த்தக சங்கத்தில் இஃதார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்துவதன் முக்கிய நோக்கம் என்னவென்றால், இந்த அகில இந்திய வர்த்தக சங்கமானது மதபாகுபாடு இல்லாமல் மத நல்லிணக்கத்தோடு அனைத்து மதத்தினரும் மிகவும் ஒற்றுமையுடன் கூடிய பெரு நிறுவனங்கள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள், தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் சார்ந்த பலரின் ஆதரவுடன் பலரின் நல் ஆதரவுடன் வளர்ச்சி பெற்று வருவதை குறிப்பிட்டு பேசினார். இது ஒரு மதச்சார்பற்ற மத நல்லிணக்க முறையில் செயல்படும் வர்த்தக சங்கமாதலால் மூன்று மதத்தினரையும் அழைத்து இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்துவது மிகவும் பெருமைக்குரியதாகும் என்றும் இறைவனின் அன்பும், அரவணைப்பும் நமக்கு என்றென்றும் இருக்க வேண்டும் என்று, நம்மால் முடிந்த அளவிற்கு நம்மிடம் உதவி கேட்டு நாடினால் அவர்களுக்கு நாம் மனமுவந்து உதவி செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் செயற்குழு உறுப்பினர் மற்றும் ஜாமியா பள்ளிவாசல் செயலாளர் எம்.எஸ்.எப்.ரஹ்மான் ஏற்பாட்டின்படி
நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது. இறுதியில் சங்கப் பொதுச் செயலாளர் சங்கர் மாரிமுத்து நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில், செயற்குழு உறுப்பினர் ரமேஷ், பாலசரஸ்வதி, சிட் பண்ட் அதிபர் பாலகிருஷ்ணன். சண்முகம் ஆறுமுகசாமி, டி.பி.எஸ்.தனபாலன், தில்லை, சிதம்பரம், பாலசேகரமூர்த்தி, ராஜசீலன், பால், அசோக்குமார், சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.