
நடைபாதை வியாபாரிகளிடம் திமுக அரசின் சாதனைகளை கூறி வாக்கு சேகரித்தார் மேயர் ஜெகன் பெரியசாமி
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட குறிஞ்சி நகர் பூங்கா, கேடிசி நகர், 4வது கேட் ஆகிய பகுதிகளில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி வாக்குகள் சேகரித்தார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக துணைப் பொதுச்செயலாளர் 2வது முறையாக கனிமொழி கருணாநிதி போட்டியிடுகிறார். இதனையடுத்து, தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் கனிமொழி, திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் உள்ளிட்டோர் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில், திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் துண்டு பிரசுரம் விநியோகித்து உதயசூரியன் சின்னத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி வாக்கு சேகரித்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக, இன்று (05/04/2024) தூத்துக்குடி குறிஞ்சிநகர் பூங்கா, கேடிசி நகர், 4வது ரயில்வே கேட் அருகில் உள்ள வணிக நிறுவனங்களில் வணிகர்களிடம், அப்பகுதியை சுற்றியுள்ள நடைபாதை வியாபாரிகளிடமும் மேயர் ஜெகன் பெரியசாமி திமுக அரசின் சாதனைகளை எடுத்து கூறி வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தார்