தூத்துக்குடியில் போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் கனிமொழிக்கு வாக்கு சேகாிப்பு அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடியில் போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் கனிமொழிக்கு வாக்கு சேகாிப்பு அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தோ்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக துணைப்பொதுச்செயலாளருமான கனிமொழி போட்டியிடுகிறார். அவரை ஆதாித்து கூட்டணிகட்சியை சேர்ந்த தலைவர்கள் உள்ளிட்ட பலர் தீவிரமாக வாக்கு சேகாித்து வருகின்றனர்.

இந்நிலையில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் போக்குவரத்து தொழிற்சங்க கூட்டணியை சேர்ந்த நிா்வாகிகள் தொழிலாளர்கள் தூத்துக்குடி கோவில்பட்டி விளாத்திக்குளம் ஆகிய 3 தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் விஇ ரோடு கட்டட தொழிலாளர்கள் இடம் அருகில் இந்தியா கூட்டணி தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற பிரச்சார தொடக்கத்திற்கு தொழிற்சங்க கவுன்சில் தலைவர் சுசி ரவீந்திரன் தலைமை வகித்தார்.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தது பேசுகையில் போக்குவரத்து துறை தனியார் வசம் இருந்ததை கலைஞர் ஆட்சியில் தான் அதை அரசுடமையாக்கி போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் பணியாளர்களுக்கும், பல்வேறு சலுகைகளை வழங்கி அவர்களது வாழ்வில் ஓளியேற்றி வைத்தது. திமுக ஆட்சிதான் கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறையை நிர்வாக சீர்கேடுகளின் மூலம் சீர்குலைத்து தள்ளாடும் நிலைக்கு தள்ளிவிட்டனர். போக்குவரத்துதொழிற்சங்க நிர்வாகிகள் வைத்த கோாிக்கைகள் கூட முறைப்படுத்தி செயல்படுத்தவில்லை. திமுக ஆட்சி அமைந்தபின் அவர்கள் வைத்த கோாிக்கையை போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் அதிகாாிகள் அடங்கிய குழுவினர் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி தொழிலாளர்கள் நலன் முக்கியம் என கருதி முதலமைச்சாின் வழிகாட்டுதலின்படி ஒன்றன்பின் ஒன்றாக கோாிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சி எப்போதெல்லாம் அமைகிறதோ அந்த காலம் தான் போக்குவரத்து தொழிலாளா்களுக்கு வசந்தகாலமாக அமைந்துள்ளது. அதிலும் குறிப்பாக தொழிலாளர்களுக்கு நலவாாியம் அமைக்கப்பட்டது மழைகாலங்களில் உப்பள தொழிலாளர்களுக்கு நலவாாியம் மூலம் 5ஆயிரம் வழங்கப்பட்டதை போல் போக்குவரத்து தொழிற்சங்கத்தில் உள்ள ஓப்பந்த பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டது. இதை கருத்தில் கொண்டும் இந்த ெதாகுதியில் கனிமொழியாற்றிய பணிகளையும் திமுக ஆட்சியின் சாதனைகளையும் துண்டு பிரசுரம் வழங்கி 3 தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள் டெபாசிட் இழக்க வேண்டும் என்று பேசினார்.

திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், தொமுச நிர்வாகிகள் முருகன், மாியதாஸ், கருப்பசாமி, உலகநாதன், வேல்முருகன், சண்முகராஜ், சந்தானம், சிஐடியு ரசல், ஏஐடியுசி கவுன்சிலர் தனலட்சுமி, பாலசிங், ஹெச்எம்எஸ் ராஜ்குமார், ஐஎன்டியுசி ராஜ், ஏஐசிசியு சகாயம், உள்பட பல்ேவறு தொழிற்சங்கத்தை சேர்ந்த இந்தியா கூட்டணி நிா்வாகிகள் ெதாழிலாளா்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )