
தூத்துக்குடி மாவட்டத்தில் பறக்கும் படை அதிகாரி அட்டூழியம் – கலெக்டர் லட்சுமிபதி கண்டுகொள்வாரா?
இந்தியாவில் 17வது மக்களவை தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு இந்தியா முழுவதும் ஏழு கட்டமாக நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்தில் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் தோ்தல் நடைபெறுகிறது. தேசிய அரசியல் கட்சி மட்டுமின்றி மாநில கட்சிகள் மற்றும் பல்வேறு பொதுநல அமைப்பை சேர்ந்தவர்கள் வேட்பாளராக களமிறங்கி பல்வேறு வாக்குறுதிகளை அளித்து சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாமல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் ஆணையம் எந்த ஆவணமின்றி 50 ஆயிரம் வரை எடுத்துச்செல்லலாம் அதற்கு மேல் கொண்டு செல்லும் பணத்திற்கும், பொருட்களுக்கும் ஆவணங்கள் கொண்டு சென்றால் அதை முறையாக சம்பந்தபட்டவர்களுக்கு வழங்கப்பட்ட ஆவணமின்றி எடுத்து செல்லும் பணம் பொருட்களை பறிமுதல் செய்து மாவட்ட தேர்தல் அதிகாா கவனத்திற்கு கொண்டு சென்று கையகப்படுத்தி வருகிறது. இதற்கு சில நடைமுறைகள் பின்பற்றப்பட்டு ஆதாரம் காண்பிக்கப்படுகிறது பின் பல பொருட்களும், பணமும் திரும்ப ஒப்படைக்கும் நிலையும் இருந்து வருகிறது.
ஆனால் இந்த பாயிசோதனைக்கு அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பறக்கும்படையை சேர்ந்த சில ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பை உணர்ந்து செயல்படாமல் எல்லையை மீறி கடமைக்கு பணியாற்றுவது மட்டுமின்றி சில இடங்களில் காவல்துறையினரின் அறிவுரைகளையும் மீறி மிகப்பொிய அடக்கும் முறையை கையாண்டு வருகின்றனர். பல கோடிகள் சர்வசாதாரணமாக பல வழிகளிலும் சில இடங்களுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. அதற்கெல்லாம் சிலர் துணை போகும் நிலையில் யானை செல்வது சிலருக்கு தெரிவதில்லை பூணை செல்வது தான் தொய்கிறது என்ற பழமொழிக்கேற்ப, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தேர்தல் அதிகாரியான லட்சுமிபதி தலைமையின் கீழ் செயல்படும் பல்வேறு அதிகாரிகள் குழு இரவு பகல் பாராமல் சூழ்ச்சி முறையில் பணி செய்தது பாராட்டுக்குரியது தான். அதே வேலையில் சில இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் சோதனைகளில் அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி சாதாரண தினக்கூலி தொழிலாளிகள் வரை வைக்காமல் சோதனை என்ற பெயாில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மதிப்பீடு செய்யாமல் அதை குறிப்பிட்டு வழக்குப்பதிவு செய்து தான் வேதனையாக உள்ளது என்று பலர் புலம்பும் நிலையில் உள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு தென்பாகம் காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையின் போது, திமுக ஓன்றிய செயலாளரும், ஊராட்சி மன்ற தலைவருடைய வாகன சோதனையும். அதில் திமுக சின்னம் பொறித்த தொப்பி கீ செயின் உள்ளிட்ட பொருட்கள் உள்ளன. இதையடுத்து அதன் மதிப்பு 25 லட்சம் ரூபாய் என்று கூறி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மேகலா கொடுத்த தகவலின்படி வழக்குப்பதிவு செய்து கார் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். வெறும் 8 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களுக்கு 25 லட்சமா என முறையிட்டபின்னர் முறையான ஆய்வுக்கு பின் இதன் மதிப்பு 53 ஆயிரத்து 500 என மதிப்பிடப்பட்டுள்ளது.
அரசுத்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் இது போன்ற மதிப்பீடுகள் தொியாமல் கடமைக்கு பணியாற்றுவதன் மூலம் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர தயாராகி வருகின்றனர்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ளபடி பாதிக்கப்பட்ட திமுக ஓன்றிய செயலாளரிடம் கேட்டபோது, தவறான தகவல்களை அளித்து வழக்குப்பதிவு செய்ததை, தலைமை கழகத்தின் உத்தரவிற்கிணங்க நீதிமன்றத்தை நாடவில்லை என்று கூறினார்.
தூத்துக்குடியில் இச்சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.