மாப்பிள்ளை யூரணியில் கனிமொழிக்கு ஆதரவாக ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் வாக்கு சேகாித்தார்

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தோ்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளராக திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழியை ஆதாித்து, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிழக்கு ஒன்றியத்தில் கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் தலைமையில் மாப்பிள்ளையூரணி இந்திராநகரில் நாடாளுமன்ற வேட்பாளர் கனிமொழிக்கு வீடு வீடாக சென்று அவரது சாதனைகளை துண்டு பிரசுரம் மூலம் கொடுத்து வாக்குகள் சேகரித்தனர்.

ஒன்றிய அவைத் தலைவர் ஜோதிடர் முருகன், மாவட்ட பிரதிநிதி தர்மலிங்கம், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தங்கமாரிமுத்து, ஒன்றிய பொருளாளர் மாரியப்பன், பாக பொறுப்பாளர் கிளை செயலாளர் பாரதிராஜா, கிளை செயலாளர் பொன்னுசாமி, பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் மகளிர் அணியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )