தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெற்று வரும் பாராளுமன்ற  தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களுக்கு மாவட்ட எஸ்பி நேரில் சென்று பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களுக்கு மாவட்ட எஸ்பி நேரில் சென்று பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெற்று வரும் பாராளுமன்ற  தேர்தலை முன்னிட்டு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரில் சென்று பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.

பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு இன்று (19.04.2024) தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் 3 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் டி.எஸ்.பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐக்கள், துணை இராணுவத்தினர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், ஊர் காவல் படையினர், முன்னாள் இராணுவத்தினர், தீயணைப்பு படையினர், ஓய்வு பெற்ற காவல்துறையினர் உட்பட 3500 போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாராளுமன்ற  தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் வாக்குசாவடி மையங்களுக்கு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று தேர்தல் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )