தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தின் சக்கரம் ஏறியதில் பெண் படுகாயம்

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தின் சக்கரம் ஏறியதில் பெண் படுகாயம்

தூத்துக்குடி சக்தி நகரைச் சேர்ந்தவரா பூசையா மனைவி சண்முகத்தாய் (43). இவர் நாலுமாவடி செல்வதற்காக தூத்துக்குடி அண்ணா (பழைய) பேருந்து நிலையத்தில் நேற்று பேருந்துக்காக காத்திருந்தாராம். அப்போது, அங்கு வந்த அரசுப் பேருந்தில் சண்முகத்தாய் ஏற முயற்சித்தபோது, எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததில் பேருந்தின் சக்கரத்தில் கால் சிக்கி பலத்த காயமடைந்தார்.

இதைக் கண்ட சக பயணிகள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மத்தியபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )