
திருச்செந்தூர் ஆலந்தலை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் மற்றும் வாகனம் பறிமுதல் – இருவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் உட்கோட்டம் பகுதியில் நேற்றிரவு (25.04.2024) 9.30 மணியளவில் தூத்துக்குடி கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில், உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ் ,செல்வகுமார், தலைமை காவலர் ராமர், இருதயராஜ், காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் ஆலந்தலை அடுத்துள்ள கணேசபுரம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் அப்போது சந்தேகத்திற்கு இடமாக TN 21 R 8350 என்ற பதிவு எண் கொண்ட 407 லோடு வேன் சென்றுள்ளது அதை மடக்கி பிடித்து சோதனையிட்டதில், அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு செல்லப்பட்ட பீடி இலை 42 மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து வாகனத்தில் வந்த ஆனந்தலை பகுதியைச் சேர்ந்த தொம்மை மகன் ராஜா (வயது 29) மற்றும் டிரைவரான தூத்துக்குடி எஸ்.எஸ். மாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்த வேல் மகன் பாலமுருகன் (35) ஆகியோரை கைது செய்து, 42 மூட்டை பீடி இலைகள் மற்றும் 407 வாகனத்தை பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் எடை சுமார் 1.250 kg ஆகும். இதன் மதிப்பு 10 லட்சம் ஆகும்.