
தூத்துக்குடி பகுதியில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பெய்த எதிர்பாராத கன மழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன அப்பணியில் முழுமையாக அமைச்சர் , அரசு துறை அதிகாாிகள் ஈடுபட்டு, புதிய கால்வாய் சேதமடைந்த சாலைகள் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பல்வேறு பகுதியில் புதிய பேவர் பிளாக் சாலைகள் அமைக்க வேண்டும் என்று பகுதி பொதுமக்கள் ஏற்கனவே கோாிக்கை வைத்திருந்தன, இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக 6 வது வார்டுக்குட்பட்ட அய்யர்விளையில் நடைபெறும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியையும், 7வது வார்டு லூர்தம்மாள்புரம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் கால்வாய் கட்டுமான பணிகளையும், 8 வது வார்டு திரேஸ்புரம் பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டு ஓப்பந்ததாரர்களிடம் நல்லமுறையில் பணியை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பின்னா் அப்பகுதி மக்களிடம் குறைகளையும் அமைச்சர் கீதாஜீவன் கேட்டறிந்தாா்.
ஆய்வின் போது மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் பவாணிமார்ஷல், ஜெயசீலி, அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ராபர்ட், வட்டச்செயலாளர் ரவிசந்திரன், வட்டப்பிரதிநிதிகள் மார்ஷல், பாஸ்கர், ெபருமாள் கோவில் அறங்காவலர் குழ தலைவர் செந்தில்குமார், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் பிாின்ஸ் ராஜேந்திரன், மற்றும் மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.