
தூத்துக்குடியில் 4 இடங்களில் திமுக சார்பில் கோடைகால நீர், மோர் பந்தல் அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கினார்
தூத்துக்குடி கோடைவெயில் வாட்டி வதைக்கும் இந்தநேரத்தில் தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், மாநில இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதிஸ்டாலின் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் போல்பேட்டை, கீதாமெட்ாிக் பள்ளி அருகில், பழைய பேருந்துநிலையம் அருகில், புதிய பேருந்து நிலையம் அருகில், கலைஞர் அரங்கம் அருகில் உள்பட 4 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தலை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் திறந்து வைத்து மோர், சர்பத், பழரசம், ரோஸ்மில்க், இளநீர், எலிமிச்சை ஜூஸ், ரஸ்னா, உள்ளிட்ட குளிர்பானங்கள், மற்றும் தர்பூசணி பழம், வாழைப்பழம், செவ்வாழை, அண்ணாசிபழம், போன்ற பழவகைகளையும் பொதுமக்களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார், மாநகராட்சி மண்டலத்தலைவர் கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூாிதங்கம், மாவட்ட மகளிர் அணி தலைவர் தங்கம், அமைப்பாளர் கவிதாதேவி, துணை அமைப்பாளர் செல்வி, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாவட்ட பிரதிநிதிகள் செல்வக்குமார், ராஜ்குமார், நாராயணன், தகவல் தொழில்நுட்ப அணி துைண அமைப்பாளர் அருணாதேவி, கவுன்சிலர்கள் ஜாக்குலின் ஜெயா, நாகேஸ்வாி, அந்தோணி பிரகாஷ் மாா்ஷலின், கந்தசாமி, தெய்வேந்திரன், அரசு வழக்கறிஞர் ஆனந்த கபாியேல்ராஜ், மாநகர இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன்ஜேக்கப், சிறுபான்மை அணி அமைப்பாளர் சாகுல்ஹமீது, பொறியாளர் அணி தலைவர் பழனி, சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், தொண்டரணி துைண அமைப்பாளர் முத்துராமன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் அற்புதராஜ், அமைப்பசாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் முத்துராமலிங்கம், வட்டச்செயலாளர்கள் கதிரேசன், செந்தில்குமார், பாலகுருசாமி, சதீஷ்குமார், ராஜாமணி, சுரேஷ், முனியசாமி, மகளிர் அணி ரேவதி, சத்யா, வட்ட துணைச்செயலாளர் சேர்மதுரை,வட்டப்பிரதிநிதிகள் குமரன், சரவணக்குமார், காதர்மைதீன், பாஸ்கா், அன்பரசன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் கருணா மணி, அல்பட், மாாிமுத்து, ரவிகுமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.