தூத்துக்குடியில் மேம்பால தடுப்புச் சுவரில் அரசு பேருந்து மோதி விபத்து- 37 பயணிகள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்

தூத்துக்குடியில் மேம்பால தடுப்புச் சுவரில் அரசு பேருந்து மோதி விபத்து- 37 பயணிகள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்

மதுரையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி புறப்பட்ட அரசு பேருந்து இன்று அதிகாலை தூத்துக்குடி – திருச்செந்தூர் பிரதான சாலையில் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சில் நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரம் சேர்ந்த முருகப்பெருமாள் (43) என்பவர் டிரைவராகவும், முத்து செல்வம் என்பவர் கண்டக்டராகவும் பணியில் இருந்தார். பஸ்ஸில் 37 பயணிகள் இருந்துள்ளனர்.

நேற்று காலை 3.50 மணிக்கு தூத்துக்குடி எம்ஜிஆர் நகர் மேம்பாலத்தில் செல்லும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்ஸின் முன்பகுதி சேதம் அடைந்தது. ஆனால், 37 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். உடனடியாக பயணிகள் மாற்று பேருந்து மூலம் திருச்செந்தூர் அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )