தூத்துக்குடியில் மனைவி பிரிந்து சென்றதால் மீனவர் தூக்குப் போட்டு தற்கொலை

தூத்துக்குடியில் மனைவி பிரிந்து சென்றதால் மீனவர் தூக்குப் போட்டு தற்கொலை

தூத்துக்குடி இனிகோ நகரில் மனைவி பிரிந்து சென்றதால் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுவதாவது, தூத்துக்குடி இனிகோ நகரை சேர்ந்தவர் அருள்ராஜ் மகன் பிரபாகரன் (39). மீனவரான இவருக்கு திருணமாகி மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் தினசரி மதுபோதையில் வீட்டுக்கு செல்வதால் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டதாம். இதனால் அவரது மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டாராம். இதில் மனம் உடைந்த பிரபாகரன் வீட்டில் நேற்றிரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் இறந்த பிரபாகரன் இறுதிச்சடங்கு இனிகோ நகரில் உள்ள இன்னாசியார் ஆலயத்தில் வைத்து நேற்று ஏப்.28ம் தேதி பிற்பகல் 3 மணியளவில் திருப்பலி நிறைவேற்றி நல்லடக்கம் செய்யப்பட்டது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )