
கோரிக்கை வைத்த மாணவிகள் உடனடியாக நிறைவேற்றிக் கொடுத்த மேயர் – பொதுமக்களுக்கு வேண்டுகோள்.!
தூத்துக்குடி பாளை ரோட்டில் உள்ள வ.உ.சி கல்லூரி முன்புறம் அமைந்துள்ள மாநகராட்சி படிப்பகத்தினை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார். அப்போது, அங்கிருந்த மாணவிகள் போட்டித் தேர்வுகளுக்கு தேவையான சில புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மேயர் அவர்கள் கேட்டுக்கொண்ட புத்தகங்களை அந்த படிப்பகத்திற்கு உடனடியாக வழங்கினார்.
, மாநகரத்தில் உள்ள இளைஞர்கள் இந்த படிப்பகத்தினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். மேலும், மாநகர மக்கள் இயன்ற புத்தகங்களை இந்த படிப்பகத்திற்கு வழங்குமாறு மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
நிகழ்வில், வட்டச் செயலாளர் ரவீந்திரன், மேயரின் உதவியாளர்கள் பிரபாகர், ஜோஸ்பர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
CATEGORIES மாவட்டம்