வாக்கு எண்ணும் மையம் சுற்றிலும் 2 கி.மீ. சுற்றளவிற்கு “சிவப்பு மண்டலமாக அறிவிப்பு – தூத்துக்குடியில் இன்று முதல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் நாள் வரை டிரோன்கள் பறப்பதற்கு தடை

வாக்கு எண்ணும் மையம் சுற்றிலும் 2 கி.மீ. சுற்றளவிற்கு “சிவப்பு மண்டலமாக அறிவிப்பு – தூத்துக்குடியில் இன்று முதல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் நாள் வரை டிரோன்கள் பறப்பதற்கு தடை

தூத்துக்குடி பாராளுமன்ற பொதுத் தேர்தல் வாக்கு எண்ணும் மையமான வ.உ.சி. பொறியியல் கல்லூரியைச் சுற்றிலும் 2 கி.மீ. சுற்றளவிற்கு “சிவப்பு மண்டலமாக” (Red Zone)ஆக அறிவித்து இன்று முதல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் நாள் வரை டிரோன்கள் பறப்பதற்கு தடை – தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.

36.தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் ஆவணங்கள் பாதுகாப்பிற்காக தூத்துக்குடி பல்கலைக்கழக வ.உ.சி பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள பாதுகாப்பு அறையில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு குறித்து போலியான செய்திகள் பரவுவதைத் தடுக்கும்பொருட்டு அனைத்து வாக்கு எண்ணும் மையங்களைச் சுற்றிலும் டிரோன்கள் பறப்பதைத் தடை செய்ய அறிவுரை வரப்பெற்றுள்ள காரணத்தினால் தூத்துக்குடி பல்கலைக்கழக வ.உ.சி. பொறியியல் கல்லூரியைச் சுற்றிலும் 2 கி.மீ. சுற்றளவிற்கு “சிவப்பு மண்டலமாக” (Red Zone) ஆக அறிவித்து டிரோன்கள் இன்று முதல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் நாள் வரை பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும் இந்த தடையை மீறும்பட்சத்தில் உரிய விதிகளின் கீழ் காவல் துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரும், மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )