
தூத்துக்குடியில் “அம்மா வாட்டர் நிறுத்தம்* ஓபிஎஸ் அணி ஏசாதுரை கண்டனம்.
தூத்துக்குடி: தமிழக முன்னாள் அதிமுக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ, அணியின் தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் எஸ் ஏசாதுரை வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா ஆட்சி காலத்தில் மக்கள் நலன் தான் முக்கியம் என்ற தொலைநோக்கு சிந்தனையோடு அம்மா உணவகம், அம்மா காய்கனி கடை, அம்மா மருந்தகம், அம்மா சிமென்ட், என பல்வேறு மக்கள் நலனை பாதுகாத்து குறைந்த விலையில் மக்களுக்கு அரசின் நேரடி பார்வையில் வழங்கப்பட்டு வந்தது.
அதேபோல வௌியூர் செல்லும் பயணிகள் நலன் கருதி அனைத்து பேருந்து நிலையங்களிலும் 10 ரூபாய்க்கு அம்மா வாட்டர் பாட்டில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதை பொதுமக்கள் மற்றும் பேருந்தில் செல்லும் பொதுமக்கள் பயனாளிகள் பயன்படுத்தி வந்தனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் மக்களுக்காக அம்மா அறிவித்த பல திட்டங்களை முடக்கியும் இருக்கின்ற ஓரு சில திட்டத்தையும் மூடுவிழா செய்து வருகிறது. அதே வழியில் அனைத்து பேருந்து நிலையங்களிலும் இந்த கோடைகாலத்தில் மக்கள் பொிதும் பயனடைய கூடிய அம்மா வாட்டர் பாட்டில் விற்பனை திட்டத்தை முழுமையாக நிறுத்தியுள்ளனர். இதை உடனடியாக தமிழக அரசு போர்கால அடிப்படையில் மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிற்கிணங்க தமிழக அரசை கண்டித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு போராட்டம் நடத்தப்படும் என்று ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் எஸ் ஏசாதுரை வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருந்தார்