தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன- 94.56% பேர் தேர்ச்சி

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன- 94.56% பேர் தேர்ச்சி

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம் குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (06/05/2024) வெளியிடப்பட்டன.

தேர்வு முடிவுகளை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்கத்தில் அரசு தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார். அதில், கடந்த ஆண்டு தேர்வெழுதியவர்களில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்தாண்டு 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 7.67 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.53 சதவீதம் அதிகமாகும். தேர்ச்சி விகிதத்தில் வழக்கம் போல மாணவிகளே அதிகளவில் தேர்ச்சிபெற்றுள்ளனர். தேர்வெழுதியவர்களில் மாணவிகள் 96.44 சதவீதம் பேரும், மாணவர்கள் 92.37 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், தமிழகத்தில் 2478 பள்ளிகள் நூறு சதவீதம் தேரச்சி பெற்றுள்ளனர். இதில், 397 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி என்ற சாதனையைப் படைத்துள்ளன.

பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்:

அரசுப் பள்ளிகள் 91.32%

அரசு உதவிப்பெறும் பள்ளிகள் 95.49%

தனியார் பள்ளிகள் 96.7%

மகளிர் பள்ளிகள் 96.39%

ஆண்கள் பள்ளிகள் 86.96%

இருபாலர் பள்ளிகள் 94.7%.

மேலும் பாட வாரியாக நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற விவரங்களும் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழ் 35, ஆங்கிலம் 7, இயற்பியல் 633, வேதியியல் 471, உயிரியல் 652, கணிதம் 2,587, தாவரவியல் 90, விலங்கியல் 382, கணினி அறிவியல் 6,996, வணிகவியல் 6,142, கணக்கு பதிவியல் 1,647, பொருளியல் 3,299, கணினி பயன்பாடுகள் 2,251, வணிக கணிதம் 210 மாணவர்கள நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளங்கள் முலம் மாணவர்கள் சிரமமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொண்டனர். மேலும், பொதுத் தேர்வெழுதிய மாணவர்களுக்கு பதிவு செய்த செல்போனுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )