
தூத்துக்குடியில் தனியார் காற்றாலை ஜேசிபி டிரைவர் மீது 3 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் – 2 பேர் கைது ஒருவருக்கு போலீஸ் வலை வீச்சு
தூத்துக்குடியில் தனியார் காற்றாலை ஜேசிபி டிரைவர் மீது 3 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் – 2 பேர் கைது தலைமறைவான ஒருவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம், பசுவந்தனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எவர்நியூ தனியார் காற்றாலை நிறுவனமானது அரசு அனுமதியுடன் காற்றாலைகளை அமைத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வெங்கடாசலபுரம் கிராமத்தில் எவர்நியூ தனியார் காற்றாலை நிறுவனமானது காற்றாலை அமைக்கும் பணியில் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வெங்கடாசலபுரம் கிராம புல எண்: 89, 90 ல் அந்நிறுவனத்திற்கு சொந்தமான லாரி மூலம் காற்றாலை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது அக்கம்பெனியில் ஜே.சி.பி டிரைவராக வேலைசெய்து வரும் சங்கம்பட்டி நடுத்தெருவைச் சார்ந்த சமுத்திரம் மகன் மாரிச்செல்வம் ஒட்டி வந்த ஜேசிபி பணி நடைபெற்றுக் கொண்டு இருக்கும் இடத்திற்கு செல்லும் பாதை அருகில் தூத்துக்குடி சிலுவைப்பட்டி இந்திரா நகரை சார்ந்த மூக்காண்டி மகன் பத்மநாபன் மற்றும் அவருடன் இணைந்து வந்த தூத்துக்குடியைச் சார்ந்த ஆம்ஸ்ட்ராங் மற்றும் வடக்கு கல்மேடு கருப்பசாமி மகன் ரகுபதி ஆகிய மூன்று பேர் வந்த நிலையில் ஜேசிபி டிரைவர் மாரி செல்வத்திடம் பத்மநாபன் தனக்கு அப்பகுதியில் சொந்தமாக நிலம் உள்ளதாகவும், தனது நிலத்தின் அருகில் உள்ள காற்றாலை பாதையை பயன் படுத்தக்கூடாது அதில் தனக்கும் பங்கு உள்ளது எனக்கூறி அதிக பணம்கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அதற்கு காற்றாலை நிறுவனத்தின் ஜே.சி.பி டிரைவர் மாரிச்செல்வம் கம்பெனிக்கு சொந்தமான பாதை உள்ளதால் தங்களுக்கு பணம்கொடுக்க முடியாது எனக்கூறியுள்ளார்..இதைத் தொடர்ந்து பத்மநாபன், ஆம்ஸ்ட்ராங், ரகுபதி ஆகியோர் சேர்ந்து காற்றாலை பாதையை மறித்து பள்ளம் தோண்டி வைத்துவிட்டதாகவும், இதனால் உள்ளே பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த லாரி திரும்பி வெளியே வர விட முடியாமல் முடக்கியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து தோண்டப்பட்ட பள்ளத்தை மூடுவதற்காக மாரிச்செல்வம் சென்றபோது அவர் ஒட்டி வந்த TN 79 E 9324 எண்கொண்ட JCB வாகனத் தை மாரி செல்வத்தையும் வெங்கடாசலபுரம் விலக்கு அருகில் வைத்து 3 பேரும் மாரிச்செல்வம் ஒட்டி வந்த ஜேசிபி வண்டியை வழிமறித்து அவரை கீழே இறங்கச்சொல்லி அவரிடம் தகராறில் ஈடுபட்டு தோண்டி போட்ட பள்ளத்தை மூட வருவாயா என அசிங்கமாகப்பேசி, அடித்து கீழே தள்ளியுள்ளனர்.
பின்னர், 3 பேரும் கீழே கிடந்த கல்லை எடுத்து JCB வாகனத்தின் பின்பக்க கண்ணாடியை உடைந்துள்ளனர். ஜேசிபி டிரைவர் மாரி செல்வம் ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டதற்கு, 3 பேரும் மாரி செல்வத்தை பார்த்து நாங்கள் தோண்டிய பள்ளத்தை மூடவந்தால் உன்னை கொல்லாமல் விடமாட்டோம் என்று மிரட்டி அடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவர் இதுகுறித்து குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து குளத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜ் வழக்குப்பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்ட பத்மநாபன் மற்றும் ரகுபதி ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஆம்ஸ்ட்ராங் என்பவரை வலை வீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.