நடத்தையில் சந்தேகம் மனைவியை வெட்டிப் படுகொலை செய்த கணவன் கைது – தூத்துக்குடியில் தொடரும் கொலைகள்.!

நடத்தையில் சந்தேகம் மனைவியை வெட்டிப் படுகொலை செய்த கணவன் கைது – தூத்துக்குடியில் தொடரும் கொலைகள்.!

தூத்துக்குடி முத்தையாபுரம் ராஜ கணபதி நகரை சேர்ந்தவர் நாகேந்திரன் (55) லாரி டிரைவர். இவரது மனைவி ரெஜினா மேரி (47) கூலி வேலைக்கு சென்று வருகிறார். ரெஜினா மேரியின் நடத்தையில் சந்தேகமடைந்த நாகேந்திரன் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று 06/05)2024)  காலை அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நாகேந்திரன் மனைவி ரெஜினா மேரியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளார். படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த முத்தையா புரம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலை செய்த நாகேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் கணேஷ் நகர் பகுதியில் மனைவியை கணவன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ள நிலையில், இன்று தூத்துக்குடி முத்தையாபுரத்தில் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொன்ற சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )