தமிழக உள்ளாட்சி தேர்தல் எப்போது? இன்று தெரிவிக்கிறது ஆணையம்
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எந்த தேதியில் நடத்தப் படும் என்பதை இன்று தெளி வாக தெரிவிக்குமாறு மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைய இருந்ததால், புதிய பிரதிநிதிகளை தேர்வு செய்யும் வகையில், கடந்த ஆண்டு அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடக்க இருந்தது. இத்தேர்தலில் பழங் குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கவில்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், உள் ளாட்சி தேர்தல் அறிவிப்பு தமிழ்நாடு பஞ்சாயத்து சட்ட விதிகளைப் பின்பற்றி முறையாக வெளியிடப்பட வில்லை என்று கூறி தேர்தலை ரத்து செய்தார். டிசம்பர் 30-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர் தலை நடத்துமாறும் உத்தர விட்டார்.
நீதிபதிகள் கண்டனம்
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்யப் பட்டது. இந்த மனுக்கள் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதி கள், ‘‘உள்ளாட்சி தேர்தலை நடத்தும் எண்ணம் மாநில தேர்தல் ஆணையத்துக்கு இல்லையா? அநாவசியமாக வழக்கை ஏன் இழுத்தடிக் கிறீர்கள்?’’ என்று கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், நீதிபதிகள் அடங்கிய 5-வது அமர்வில் இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது. மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், நீதிபதிகளிடம் ஓர் அறிக்கையை தாக்கல் செய் தார். ‘‘அறிக்கை இருக்கட்டும். எப்போது தேர்தல் நடத்தப் போகிறீர்கள் என்பதை முதலில் சொல்லுங்கள்’’ என்று நீதிபதிகள் கேட்டனர்.
இன்று மீண்டும் விசாரணை
‘‘தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டி இருப்பதால், மே 15-க்குள் தேர்தல் நடத்தப் படும்’’ என்று வழக்கறிஞர் பி.குமார் கூறினார்.
‘‘மே 15-க்குள் என்று பொது வாக கூறக்கூடாது. எந்த தேதி யில் நடத்தப்போகிறீர்கள் என தேதியை தெளிவாக குறிப் பிட்டு 21-ம் தேதி (இன்று) நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்’’ என்று உத்தர விட்டு, விசாரணையை நீதிபதி கள் தள்ளிவைத்தனர்.
இதையடுத்து உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று தெரிய வரும்.
நன்றி : தி இந்து தமிழ்