தூத்துக்குடியில் தாயின் உடலை வீட்டிற்குள் புதைத்த மகன் – கொலையா.?  போலீஸ் விசாரணை‌!.

தூத்துக்குடியில் தாயின் உடலை வீட்டிற்குள் புதைத்த மகன் – கொலையா.? போலீஸ் விசாரணை‌!.

தூத்துக்குடி அய்யனடைப்பு சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் ஜெயின் உலாபின் மனைவி ஆஷா பைரோஸ் (வயது44). கணவர் இறந்து விட மகன் முகமது குலாம் காதர் (22) என்பவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் புகாரளித்த அய்யனடைப்பு வி.ஏ.ஓ., எட்வர்ட் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்பு சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவலளித்தார். அதன்பேரில் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மகன் முகமது குலாம் காதரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கடந்த 2ம் தேதி தனது தாய் ஆஷா பைரோஸ் இறந்து விட்டதாகவும், உறவினர்கள் யாரும் இல்லாததால் தானே தாயின் உடலை வீட்டிற்குள் குழித் தோண்டு புதைத்து விட்டதாகவும் கூறியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதைக்கப்பட்ட ஆஷா பைரோஸ் உடல் இன்று (08/05/2024) மதியம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட உள்ளது. அதன்பிறகே அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது இயற்கை மரணமா.? என்பது தெரியவரும்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )