
வடக்கு மாவட்ட திமுகவில் உதயநிதி புறக்கணிப்பா.?.
வடக்கு மாவட்ட திமுகவில் உதயநிதி புறக்கணிப்பா.?.
தூத்துக்குடி திமுகவுக்குள் தொடரும் சலசலப்பு –
அதிருப்தியில் இளைஞரணி.!.
மக்களவை தேர்தல் முடிந்த பிறகு வெளிவந்த குறைந்த வாக்குப்பதிவு சதவீதத்தால் தூத்துக்குடி திமுகவுக்குள் ஏற்பட்டுள்ள சர்ச்சை தனிவதற்குள், மீண்டும் ஓர் பூகம்பத்தை வடக்கு மாவட்ட திமுக ஏற்படுத்தி உள்ளது .!.
திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடியில் மாவட்ட செயலாளர் கீதாஜீவன் ஏற்பாட்டில் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும்விதமாக கோடை கால நீர், மோர் பந்தல்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர், மோர் பந்தலில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளில்”கலைஞர் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் படங்கள் இடம்பெற வைத்துள்ளனர், தற்போது திமுகவின் வளர்ச்சிக்கு களமிறங்கி திறம்பட செயலாற்றி வரும் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் படம் இடம்பெற வைக்காமல் புறக்கணிப்பு செய்வதாக இளைஞரணியினர் குற்றம்சாட்டுகின்றனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுகவிற்குள் அமைக்கப்பட்டுள்ள நீர், மோர் பந்தல் விளம்பர பதாகைகளில் உதயநிதி படம் இடம் பெறாமல் போனது மாவட்ட செயலாளர் கீதா ஜீவனுக்கு எப்படி தெரியாமல் போயிற்று.?. என்ற சர்ச்சை பேச்சும், திமுக இளைஞரணி மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞரணி தலைவரின் எழுச்சிமிகு அரசியல் பயணத்தை திமுகவினரும், தமிழக மக்களும் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டுள்ள வேளையில் தூத்துக்குடி மாவட்ட திமுகவினர் உதயநிதியை புறக்கணிப்பு செய்ததாக இளைஞர் அணியினர் குற்றச்சாட்டுகின்றனர்.
இப்படிபட்ட காழ்ப்புணர்ச்சி அரசியலால் தூத்துக்குடி திமுகவுக்குள் பிளவு ஏற்பட்டு குரூப் பாலிட்டிக்ஸ் உருவாக வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது. மேலும், உதயநிதி படத்தை இடம்பெற செய்யாமல் புறக்கணிப்பு செய்த செயலை இளைஞரணி நிர்வாகிகள் முறியடிக்க தவறியது கண்டிக்கத்தக்கது என்கின்றனர் மூத்த பொறுப்பாளர்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் திமுகவினர் சுதந்திரம் இல்லாமல் கட்டுப்பாட்டிற்குள் அடங்கி இருப்பதால் திறமையான, தகுதியான உண்மை தொண்டர்கள் ஒதுக்கப்பட்டு திமுகவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடப்பட்டு, தூத்துக்குடியில் திமுக வீழும் நிலை உருவாக வாய்ப்பு உள்ளது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
தலைமை கண்காணிக்குமா.?.
தூத்துக்குடி திமுகவிற்குள் மாற்றம் வருமா.?.
எதிர்பார்ப்பில் உண்மை தொண்டர்கள்.!.