
தூத்துக்குடியில் 3 இடங்களில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் திறந்து வைத்தார்
தூத்துக்குடி கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் மற்றும் பாதசாரிகள் பயன்படும் வகையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலை அமைத்திட வேண்டுமென அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இராஜாஜி பூங்கா வாட்டர் டேங்க் முன்பு அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் ஹென்றி ஏற்பாட்டிலும், கிருஷ்ணராஜபுரம் சந்திப்பு அருகில் பகுதி துணைச் செயலாளர் முன்னாள் கவுன்சிலர் சென்பகசெல்வன் ஏற்பாட்டிலும், முத்தையாபுரத்தில் பல்க் அருகில் ஜெ பேரவை செயலாளர் முன்னாள் கவுன்சிலர் சுடலைமணி ஏற்பாட்டிலும் அமைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தல்களை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், மோர், ரோஸ்மில்க், நன்னாரி சர்பத், தர்பூசணி, வாழை, மா, ஆரஞ்சு, போன்ற பழ வகைகளும் மற்றும் வெயிலில் தற்காத்துக் கொள்ளும் வகையில் பொதுமக்களுக்கு குடை போன்றவைகளையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் சின்னத்துரை, அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாநில இணைச்செயலாளர் பெருமாள் சாமி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பெருமாள், அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜா, இலக்கிய அணி செயலாளர் நடராஜன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ், ஜெ பேரவை இணை செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், மனுவேல் ராஜ், மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா வக்கீல் மந்திரமூர்த்தி, முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, பகுதி செயலாளர்கள் சேவியர், முருகன், ஜெய்கனேஷ், வழக்கறிஞர் அணி இணை செயலாளர் சரவணபெருமாள், முனியசாமி, எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர்கள் சத்யாலெட்சுமணன், நவ்சாத், துணைச் செயலாளர் மிக்கேல், ஜெ பேரவை துணைச் செயலாளர் மாரியப்பன், மாநகராட்சி கவுன்சிலர் வெற்றி செல்வன், மாணவர் அணி இணை செயலாளர் அலெக்ஸ்ஜி, இளைஞர் இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் ஜோஸ்வா அன்பு பாலன், தெர்மல் ஜேசுராஜ், சங்கர்நாராயணன், தலைமைக் பேச்சாளர் முருகானந்தம், ஜான்சன் தேவராஜ், சுரேஷ் பர்ணான்டோ, சனிக்குலாஸ், நாகூர் பிச்சை, இம்ரான், மகளிர் அணி நிர்வாகிகள் சண்முகத்தாய், ராஜேஸ்வரி, இந்திரா, அன்னத்தாய், முத்துலெட்சுமி, ஸ்மைலா, ஜெயசுதா, வட்ட செயலாளர்கள் பாக்கியராஜ், சொக்கலிங்கம், மணிகண்டன், மணிவண்ணன், ஜெரால்டு, சுப்பிரமணி, செல்வராஜ், மாடசாமி, கண்ணையா, மாரிமுத்து, யோவன், பாண்டி, அருண் ராஜா, உலகநாதபெருமாள், கொம்பையா, பொன்சிங், சண்முகவேல், முத்துக்குமார், மற்றும் ஸ்ரீராம் செல்வசேகர், ஏசுதாஸ், பெத்துராஜ்குமார், மாரிமுத்து, பாலஜெயம், உள்பட பலா் கலந்து கொண்டனர்