
சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் இந்திய அணியைச் சேர்ந்த தூத்துக்குடி கராத்தே வீரர்கள் சாதனை
தூத்துக்குடி: கோஜுரியு வேர்ல்ட் கராத்தே டூ சோபுகாய் இந்தியாவின் சார்பாக இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் சுரேஷ் குமார் தலைமையில் மலேசியாவில் சிலாங்கூர் மாகாணத்தில் கிங் ஆப் டட்டாமி இன்டர்நேஷனல் கராத்தே போட்டியில் இந்திய கராத்தே வீரர்கள் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வென்று இந்திய மண்ணிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தனர்.
2024 மே 5ம் தேதி அன்று நடைபெற்ற இப் போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்து பலதரப்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இப் போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்ற தமிழக வீரர்களான நித்திஷ் கட்டா பிரிவில் தங்கப் பதக்கத்தையும் சண்டை பிரிவில் வெள்ளி பதக்கத்தையும், யோவான் கேஸ்ட்ரோ கட்டா பிரிவில் தங்க பதக்கத்தையும், ரோஹித் அபிஷேக் கட்டா பிரிவில் தங்கப் பதக்கத்தையும், ஜோயல் பால் கட்டா பிரிவில் தங்க பதக்கத்தையும் வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை சோபுகாய் கோஜுரியு கராத்தே பள்ளியின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் சென்சாய் செந்தில் மாவட்ட கராத்தே செயலாளர் சென்சாய் முத்துராஜா மற்றும் பல்வேறு அமைப்பினர்கள் பெற்றோர்கள் பாராட்டினர்.