தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினரின் உடற்பயிற்சியை மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் பார்வையிட்டு ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினரின் உடற்பயிற்சியை மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் பார்வையிட்டு ஆய்வு

ஆயுதப்படை போலீசாரின் கவாத்து பயிற்சி இன்று (11.05.2024) காலை தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய வளாக மைதானத்தில் நடைபெற்றது. மேற்படி போலீசாரின் உடற்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று ஆய்வு செய்து, காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணிகள் குறித்து தகுந்த அறிவுரைகள் வழங்கினார். பின்னர் போலீசாரின் குறைகளை கேட்டறிந்து அதற்கு நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது ஆயுதப்படை காவல் ஆய்வாளர் பழனிச்சாமி, சார்பு ஆய்வாளர்கள் சங்கரலிங்கம், கௌசல்யா சிறப்பு சார்பு ஆய்வாளர் பரமேஸ்வரி மற்றும் ஆயுதப்படை போலீசார் ஆகியோர் உடனிருந்தனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )