
மக்கள் நலன் தான் முக்கியம் என்று பணியாற்றுகிறோம்- மேயா் ஜெகன் பொியசாமி
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மாநகராட்சி நிா்வாகம் செயல்படுகிறது. இந்நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் அனைத்து கட்டமைப்பு பணிகளும் முறைப்படுத்தி செயல்வடிவம் கொடுத்து பணிகள் நடைபெறுகின்றன.
கடந்த ஒரு மாதகாலமாக சுட்டொிக்கும் வெயில் மக்களை வாட்டி வதைத்தன. திடிரென பெய்த கோடை மழையால் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளுக்கு மத்தியில் தேங்கிய மழைநீர் பல்வேறு பகுதிகளில் அடைப்புகள் ஏற்பட்டன. இதனையடுத்து மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி ஆனையர் மதுபாலன், உள்ளிட்டோர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் மேயர் ஜெகன் பொியசாமி கூறுகையில், திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மக்கள் நலன் தன் முக்கியம் என்று கருதி பணியாற்றினோம். கடந்த அதிமுக ஆட்சியில் கட்டமைப்புகளை முறைப்படுத்தி தேவையானவைகளை செய்யாத காரணத்தால் கடந்த 2021ம்ஆண்டு கடுமையான மழை வௌ்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோது எதிர்கட்சி தலைவராக இருந்த தளபதியார் தூத்துக்குடி மாநகாில் பல்வேறு பகுதிகளை நோில் பாா்வையிட்டு மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள் என்று அப்போதே எங்களுக்கு உத்தரவிட்டார். அதன்பின் திமுக அரசு பொறுப்பேற்ற பின் உள்ளாட்சி தேர்தலில் நான் உள்ளபட மாமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு மேயராக பொறுப்பேற்ற பின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டு எதற்கு முன்னுாிமை கொடுக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து பணிகளை செய்து வருகிறோம். முதல்வர் பாா்வையிட்டு சென்ற பகுதிகளில் புதிய கால்வாய் அமைக்கப்பட்டு மழைநீர் தேங்காத வகையில் கட்டமைப்புகளை உருவாக்கியுள்ேளாம் கடந்த ஆண்டு பெய்த எதிர்பாராத கனமழையால் மற்ற பகுதிகளில் உள்ள கன்மாய் குளங்கள் உடைப்பு ஏற்பட்டு அதன் காட்டாற்று வெள்ளம் மாநகருக்குள் வந்தது. அதையும் தளபதியார் நோில் வந்து பார்வையிட்டு கனிமொழி எம்.பி அமைச்சர்கள் என பல அதிகாாிகள் முழுமையாக பணிகள் மேற்கொண்டதின் மூலம் நான்கு நாட்களில் வௌ்ளநீர் வடிந்து மக்கள் சகஜநிலைக்கு திரும்பினார்கள். சில பணிகள் நடைபெற்று இருக்கின்றசூழல்நிலையில் எதிர்பாராத மழையால் பெய்த பாதிப்புகளையும் நோில் சென்று ஆய்வு மேற்கொண்டு பல்வேறு இடங்களில் இருந்த அடைப்புகள் தேவையான இடங்களில் உடைப்பை ஏற்படுத்தி பக்கிள் கால்வாய் பகுதிக்கு மழைநீர் செல்லும வகையில் ஜேசிபி மூலம் பணிகளை மேற்கொண்டோம். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டதை போல் இந்த ஆண்டு மழை காலத்தில் அதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாது மக்கள் நலனை கருத்தில் கொண்டு முழுமையாக நான் உள்பட அதிகாாிகள் மாமன்ற உறுப்பினர்கள் மக்களுக்காக பணியாற்றி வருகிறோம் என்று கூறினார்.
மாநகராட்சி பொறியாளர் சரவணன், மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் எமல்டன், மேயாின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் பிரபாகர், ஜோஸ்பா் உள்பட பலர் உடன் சென்றனர்.