தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கியில் (தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி) ஐ.டி ஜெனரல் மேனேஜர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 19.05.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.

பொது மேலாளர் (IT)

கல்வித் தகுதி: பொறியியல் பட்டதாரி அல்லது எம்சிஏ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 15 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 31.03.2024 அன்று 45 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: இந்தப் பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர் தமிழ்நாடு மெர்கண்டைல் ​​வங்கி விதிமுறைப்படி ஊதியம் பெறுவார்.

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.tmbnet.in / என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.05.2024

மேலும் விவரங்களுக்கு https://www.tmbnet.in / என்ற இணையதள பக்கத்தை பார்வையிடலாம்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )