
தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் – கனமழை மற்றும் மிக கனமழை எச்சரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று 15.05.2024 முதல் 17.05.2024 வரை 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கையும், 18-ம் தேதி மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையும் மற்றும் 19-ம் தேதி கனமழை எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையத்தால் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் தகுந்த முன் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்கும்படியும் மழை நேரங்களில் மரங்கள், மின்கம்பங்கள், நீர் நிலைகள் அருகில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
CATEGORIES மாவட்டம்