
தூத்துக்குடி மாநகர மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் – மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள்
தூத்துக்குடி மாவட்டத்திற்கு 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மாநகராட்சிக்கு உட்பட்ட மழை நீர் வெளியேறும் பல்வேறு பகுதிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
ஆய்விற்கு பிறகு மேயர் கூறியதாவது,
தூத்துக்குடி மாநகரத்தில் ஏற்கனவே பிரதான பக்கிள் ஓடை இருந்தாலும் புதியதாக அமைக்கப்பட்டுள்ள வழித்தடங்களான மீன்வளக்கல்லூரி முதல் புறவழிச்சாலை வரையும், சங்கரப்பேரி விலக்கில் இருந்து ஓடை வரையும், பெல் ஹோட்டல் முன்பு, சவேரியாணா அருகில், ஸ்டேட் பாங்க் காலனி முதல் திரேஸ்புரம் வரையிலும், செல்சீனி காலனியில் இருந்து அன்னம்மாள் கல்லூரி வழியாகவும், கருணாநிதி நகர் இனைக்கும் சாலை, முத்துநகர் கடற்கரை வழியாக என தற்பொழுது புதிய வடிகால் பணிகள் நிறைவுற்றுள்ளன.
எனவே, மாநகர மக்கள் எந்தவித அச்சமும் கொள்ள வேண்டாம். நமது மாநகராட்சி நிர்வாகம் கனமழையை எதிர் கொள்ள தயார் நிலையில் உள்ளது என மேய ஜெகன் பெரியசாமி கூறினார்.