தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் 2,57,135 குடும்பத்தலைவிகள் பயன்பெற்றுள்ளனர்- கலெக்டர் லட்சுமிபதி தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் 2,57,135 குடும்பத்தலைவிகள் பயன்பெற்றுள்ளனர்- கலெக்டர் லட்சுமிபதி தகவல்

தூத்துக்குடி:
தமிழ்நாட்டினை அனைத்துத் துறைகளிலும் முன்னணி மாநிலமாக திகழ்ந்திடும் வகையிலும், மாநிலத்தில் வாழும் அனைத்துத் தரப்பு மக்களின் நலனிலும் அதீத அக்கறைக் கொண்டு, குறிப்பாக ஏழை எளிய மக்களும் ஏற்றம் பெற்றிட எண்ணற்ற நல்ல பல திட்டங்களை நாளும் திறம்பட செயல்படுத்தி மக்களின் மனங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்துள்ளார் திராவிட மாடல் ஆட்சியின் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்  என்றால் அது மிகையில்லை.

2021ம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்று அன்றைய தினமே கையொப்பமிட்ட முத்தான ஐந்து திட்டங்களில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம், ஆவின் பால் விலை குறைப்பு மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிட தனித் துறை ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்,
குடும்பத் தலைவிகளுக்கு உரிய விதிமுறைகளைப் பின்பற்றி மாதந்தோறும் 1000 ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் 257135 குடும்பத் தலைவிகள் பயன் பெற்றுள்ளனர்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் 25,909 மாணாக்கர்கள் பயன் பெற்றுள்ளனர். புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து, மேற்படிப்பில் சேர்ந்த தூத்துக்குடி மாவட்டத்தைப் சேர்ந்த 2,487 மாணவிகள்  பயன் பெற்றுள்ளனர்.
இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஏழை எளியோரின் இல்லம் தேடிச் சென்று இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் வாயிலாக 4,36,519 நபர்கள்  பயன் பெற்றுள்ளனர்.

சாலை விபத்துகளில் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைப்பதோடு அதனால் குடும்பங்களுக்கு ஏற்படும் மருத்துவச் செலவினங்களை குறைக்கும் இன்னுயிர் காப்போம் / நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் 5936 நபர்களுக்கு 6,12,87,050/- ரூபாய் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. பட்டியலின மக்கள் தொழில் முனைவோர் ஆகிட அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் 53 நபர்களுக்கு 4,58,73,000 ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )