
தூத்துக்குடியில் ஒரே நாளில் 170 வாகனங்கள் மீது வழக்குப் பதிவு – போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் விதிமீறலில் ஈடுபட்ட 170 வாகனங்கள் மீது ஒரே நாளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி குருஸ் பர்னாந்து சிலை அருகில் வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் தலைமையில் வாகன தணிக்கையில் இன்று ஈடுபட்டனர். அப்போது, ஹெல்மெட் அணியாமலும், அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்ஸர் பொருத்தியும், ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், அதிக எண்ணிக்கையில் நபர்களை ஏற்றிக் கொண்டு வாகன ஓட்டிய 170 நபர்கள் மீது போக்குவரத்து காவல்துறையினர் இன்று நடவடிக்கை மேற்கொண்டனர். அபராதம் விதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும், லைசென்ஸ், வாகனத்துக்குரிய ஆர்.சி. புத்தகம், இன்சூரன்ஸ் வைத்திருக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் அதிகம் ஒலி எழுப்பக்கூடிய சைலன்ஸ் பொருத்தக் கூடாது. மேலும் இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்களுக்கு மேற்பட்டோர் செல்லக் கூடாது. ஆட்டோக்களில் அதிக எண்ணிக்கையில் நபர்களை ஏற்றி செல்லக்கூடாது. மீறினால் அபராதம் விதிக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நிகழ்வில்,, உதவி ஆய்வாளர் சதீஷ்குமார், காவலர்கள் ஜெயராஜ், கண்ணன் சுயம்புலிங்கம், எபேனேசர் ஆகியோர் பணியில் ஈடுபட்டனர்