
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் மலர் அஞ்சலி செலுத்தினார்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13பேர் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டு இருவர் உயிாிழந்தவர்களின் 6ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அரங்கில் வைக்கப்பட்டிருந்த 15 பேர் படத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மலர் அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், துணைமேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூாிதங்கம், மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அருணாதேவி, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், மாநகர தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் ரவி, சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஸ்வரன்சிங், மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளா் பெல்லா, வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்கள் ரூபராஜா, ரெக்ஸ், இலக்கிய அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், மாவட்ட பிரதிநிதிகள் செல்வக்குமார், நாராயணன், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், ஜெயக்குமார், ரவீந்திரன், மாநகர துணைச்செயலாளர் பிரமிளா, கவுன்சிலர்கள் பொன்னப்பன், நாகேஸ்வரி, சரவணக்குமார், மகேஸ்வரி, மரியகீதா, கந்தசாமி, தெய்வேந்திரன், ஜான், பட்சிராஜ், மாியகீதா, அரசு வழக்கறிஞர் ஆனந்தகபாியேல்ராஜ், வட்ட செயலாளர்கள் கதிரேசன், டென்சிங், பொன்னுசாமி, சுப்பையா, பாலகுருசாமி, கங்காராஜேஷ், சுரேஷ், முன்னாள் கவுன்சிலர் ஜெயசிங், வட்ட பிரதிநிதிகள் வேல்முருகன், பாஸ்கர், துரை, மகளிர் அணி சத்யா, ஜெபராணி, மற்றும் கருணா, மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.