
மக்கள் நலன் தான் முக்கியம் என்று பணியாற்றி வரும் முதலமைச்சர் ஸ்டாலின் வழியில் அனைத்து கோாிக்கைகள் நிறைவேற்றப்படும்- ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் உறுதி
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பெய்த எதிர்பாராத கன மழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன அப்பணியில் முழுமையாக அமைச்சர், அரசு துறை அதிகாாிகள் ஈடுபட்டு, புதிய கால்வாய் சேதமடைந்த சாலைகள் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடைபராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆலோசனைபடி, ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பல்வேறு பகுதியில் புதிய பேவர் பிளாக் சாலைகள் தார்சாலைகள் கழிவுநீர் கால்வாய்கள் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என்று பல்வேறு பகுதி பொதுமக்கள் ஏற்கனவே கோாிக்கை வைத்திருந்தனர். தேர்தல் நடைமுறைக்கு பின்னர் பல்வேறு புதிய பணிகள் நடைபெறும் என்று கூறினார்.
பெரியசெல்வம் நகர் பகுதியில் மழையில் சேதமடைந்த சாலைகளை பார்வையிட்டு அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டு சாலைகளை சீரமைத்து தருவதாகவும் அப்பகுதியில் குடிநீர் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாகவும், மேலும் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு இந்த ஊராட்சி பகுதிக்கு புதிய திட்டங்கள் குறிப்பாக சாலை வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி, செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் எந்த பணியுமே நடைபெறாமல் இருந்ததை நீங்கள் அறிவீர்கள் மக்களுக்காக தொடா்ந்து பணியாற்றும் கட்சி திமுக தான். திமுக ஆட்சிதான் உங்களுக்கு பொற்காலம் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலினும் மக்கள் நலன் தான் முக்கியம் என்று கருதி பணியாற்றுகிறார். அவரது வழியில் உங்களது சில கோாிக்கைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக முழுமையாக செய்து கொடுப்பேன், என்று ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் உறுதியளித்தார். இதனையடுத்து மாியசெல்வம் நகர் நலச்சங்கத்தினர் ஊராட்சி மன்ற தலைவாின் உறுதிமொழிக்கு நன்றியை தொிவித்துக் கொண்டனர்.