
சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருது பெற விண்ணப்பிக்கலாம் – தூத்துக்குடி கலெக்டர் தகவல்
இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும். நாட்டிற்கு பெருமை தேடித் தரும் சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்றுநர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கி கெளரவித்து வருகிறது. அதன்படி, இந்திய அரசின் சார்பில் 2023ம் ஆண்டிற்கான “டென்சிங் நார்கே தேசிய சாகச விருது” விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இவ்விருதிற்கான விண்ணப்பபடிவம் மற்றும் இதர விபரங்களை https://awards.gov.in தெரிந்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பங்களை கீழ்க்காணும் இவ்வலுவலக முகவரியில் அலுவலக நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள். 31.05.2024 மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டரங்கம், தூத்துக்குடி. அலைபேசி. 7401703508
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.