தமிழக ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக காலவரையற்ற உண்ணாவிரதம்
தமிழக ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக காலவரையற்ற உண்ணாவிரதம்:
தமிழக ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக திருவள்ளூர் மாவட்ட தலைவர் மோகன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறுகையில் – தமிழகத்தில் எங்கள் சங்கத்தின் 25000 உறுப்பினர்கள் உள்ளனர். காலியாக உள்ள இணை இயக்குனர், உதவி இயக்குனர் பதவிகளை உடனடியாக நிரப்பிட வேண்டும். அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள காலிபணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் தனி ஆனையாளர்கள் கட்டமைப்பு பொறியாளர்களை நியமிக்க வேண்டும்.
கணினி உதவியாளர்களை நிரந்தரம் செய்து ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஒன்றிய ஆணையாளர்களுக்கு பதினைந்தாயிரத்து 600 ரூபாய் ஊதியத்தை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தனர். அந்த தடையை நீதிமன்றம் நீக்கியதின் பேரில் அரசு உடண்டியாக வழங்க வேண்டும் என உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மாதம் 14 ம் தேதி வேலை நிறுத்த போரட்டமும் மாவட்ட தலைநகரில் காலவரையற்ற உண்ணாவிரத போரட்டமும் தமிழக முழுவதும் நடைபெறும் என கூறினார்..