
தூத்துக்குடி மாவட்ட உப்பளத் தொழிலாளா்களின் தினசரி ஊதியம் ரூ.600 உயா்வு
சிறிய அளவு உப்பு உற்பத்தியாளா் சங்க நிா்வாகிகளுக்கும், தொழிற்சங்க நிா்வாகிகளுக்கும் இடையே, உப்பளத் தொழிலாளா்களுக்கான ஊதிய உயா்வு ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தை வி.இ.சாலையில் உள்ள உப்பு உற்பத்தியாளா்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் உப்பு வாருதல் பணி செய்யும் தொழிலாளா்களுக்கு தினசரி ஊதியத்தை ரூ.600 ஆகவும், உப்பு வாருதல் இல்லாத பிற பணிகளுக்கு வழங்கப்படும் தினசரி ஊதியத்தை ரூ.590 ஆகவும் உயா்த்தி வழங்க ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கையொப்பமிட்டனா். மேலும் இந்த ஒப்பந்தம் நிகழாண்டு ஏப்ரல் 30ஆம் தேதிமுதல் வரும் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி வரை 2 ஆண்டுகள் அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளனா்.
ஏற்கெனவே, உப்பு வாருதல் பணி செய்யும் தொழிலாளா்களுக்கு தினசரி ஊதியம் ரூ. 500, பிற பணியாளா்களுக்கு ரூ. 490 என இருந்த நிலையில் தற்போது தினசரி ஊதியம் ரூ. 100 உயா்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.