
தூத்துக்குடி அண்ணாநகர் வழக்கறிஞர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேருக்கு குண்டாஸ்
கடந்த 11.05.2024 அன்று தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த மருந்து கடை உரிமையாளரான செந்தில் ஆறுமுகம் என்பவரை கொலை செய்த வழக்கில் கோவில்பட்டி நாலாட்டின்புதூரைச் சேர்ந்த பூமிநாதன் (எ) லெனின் மகன் கோபிநாத் (37), தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களான பெரியநாயகம் மகன் சங்கர் (எ) சங்கரலிங்கம் (28), மூக்காண்டி மகன் மணிகண்டன் (26), தூத்துக்குடி சத்யாநகரைச் சேர்ந்த முத்துசாமி மகன் ராம்குமார் (25) மற்றும் சிலரை தென்பாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி கைது செய்யப்பட்ட எதிரிகள் கோபிநாத், சங்கர் (எ) சங்கரலிங்கம், மணிகண்டன் மற்றும் ராம்குமார் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம், அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி கோவில்பட்டி நாலாட்டின்புதூரைச் சேர்ந்த பூமிநாதன் (எ) லெனின் மகன் 1) கோபிநாத், தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களான பெரியநாயகம் மகன் 2) சங்கர் (எ) சங்கரலிங்கம், மூக்காண்டி மகன் 3) மணிகண்டன், தூத்துக்குடி சத்யாநகரைச் சேர்ந்த முத்துசாமி மகன் 4) ராம்குமார் ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் 5 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.