
திருச்செந்தூரில் பெட்டிக்கடையில் இருந்த கல்லாப் பெட்டியை திருடிய பலே திருடன் கைது
திருச்செந்தூர் என். முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த சிவனைந்தான் மகன் முத்துகிருஷ்ணன் (வயது 38) என்பவர் திருச்செந்தூர்- பரமன்குறிச்சி சாலையில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
அவரது பெட்டி கடைக்கு வந்த ஒரு நபர் பீடி கேட்டுள்ளார். பீடி எடுப்பதற்காக கடைக்காரர் உள்ளே சென்றபோதுஃ, திடீரென அந்த நபர் அங்கிருந்த கல்லாப்பெட்டியை தூக்கிக்கொண்டு ஓடியுள்ளார். இதைக்கண்ட கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்தவர்கள் அவரை மடக்கி பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்செந்தூர் தாலூகா போலீசார் அந்த நபரிடம் விசாரணை செய்தபோது, தூத்துக்குடி அண்ணா நகர் 5வது தெருவை சேர்ந்த செல்வராஜ் (எ) சுப்பையா மகன் ஆனந்தராஜ் (வயது 42) என்பது தெரியவந்தது. மேலும் கைது செய்யப்பட்டுள்ள ஆனந்தராஜ் மீது திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னீர் பள்ளம் காவல் நிலையம், வள்ளியூர் காவல் நிலையம், தூத்துக்குடி மாவட்டத்தில் சிப்காட் காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களில் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டம் விட்டு பகல் மற்றும் இரவு நேரங்களில் வீடு புகுந்து கொள்ளையடித்த பல வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது
இதையடுத்து திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜை கைது செய்து திருச்செந்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைத்தனர்