நெல்லையில் பஸ் மோதி தூத்துக்குடியை சேர்ந்த முதியவர் பலி

நெல்லையில் பஸ் மோதி தூத்துக்குடியை சேர்ந்த முதியவர் பலி

தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர் நட ராஜன் (62). சற்று மனநிலை பாதிக்கப்பட்ட இவர் சில நாட்களுக்கு முன் மாயமானார். நெல்லையில் சுற்றித்திரிந்த இவர், நேற்று சந்திப்பு மேம்பாலம் அருகே சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது டவுனுக்கு சென்ற தனியார் டவுன் பஸ், எதிர்பாராதவிதமாக இவரது மீது மோதியது. இந்த விபத்தில் கால் சிதைந்து படுகாயமடைந்த இவரை நெல்லை மாநகர விபத்து தடுப்பு பிரிவு போலீசார், பொது மக்கள் துணையுடன் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். விபத்துகுறித்து நெல்லை மாநகர விபத்து தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துராஜ், உதவி ஆய்வாளர் அன்னராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )