தூய்மை காவலர்களுக்கு உணவு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் வழங்கினார்

தூய்மை காவலர்களுக்கு உணவு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் வழங்கினார்

தூத்துக்குடி இந்தியா வல்லரசு நாடாக உருவாக வேண்டும். எதிர்கால இந்தியா எல்லோருக்கும் நன்மை கிடைக்கும் வகையில் அமைய வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்து தனது பதவிகாலத்தில் பணியாற்றிய காலத்தை இன்று வரை இளைய தலைமுறையினர் மட்டுமின்றி பலரும் போற்றும் வகையில் அவரது செயல்பாடு அமைந்தது. இதற்கு முன்னோட்டமாக திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஓரு கிராமத்தின் வளர்ச்சிதான் இந்த நாடு முதுகெலும்பாக திகழ்வதற்கு காரணமாக அமைகிறது. அப்படி பட்ட பகுதிகளை தான் நாம் எல்லா வகையிலும் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் அதன் மூலம் அப்பகுதி மக்கள் எவ்வித குறைபாடுகளின்றி வாழ வேண்டும். என்று பல்வேறு கட்ட நிகழ்வுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

அதன் வழியில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடைபராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆலோசனைபடி பல்வேறு கட்டமைப்பு பணிகளை முறைப்படுத்தி மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும், தூத்துக்குடி கிழக்கு ஓன்றிய திமுக செயலாளருமான சரவணக்குமார் 59 கிராமப்பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பொதுமக்கள் கோாிக்கைபடியும் ஊராட்சி நிா்வாகத்திற்குட்பட்டும் வளா்ச்சி பணிகளை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் கோடை வெயில் காலத்திலும் ஊராட்சிக்குட்பட்ட பகுதி முழுவரும் பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட தூய்மை காவலர்கள் நாட்டுநலன் தான் முக்கியம் என்பதை கருதி அனைத்து பகுதிகளிலும் தேவையற்ற கழிவு பொருட்கள் குப்பைகளை சேகாித்து வருகின்றனர்.

தூய்மை காவலர்களின் பணி இந்த காலக்கட்டத்தில் போற்றப்பட வேண்டிய பணியாக இருப்பதால் அவர்களை கௌரவிக்கும் வகையில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி அலுவலகத்தில் தூய்மை காவலா்கள் அனைவருக்கும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் தூத்துக்குடி கிழக்கு ஓன்றிய திமுக செயலாளருமான சரவணக்குமார் தனது பிறந்தநாளையொட்டி உணவு வழங்கி கௌரவித்து தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு சில உதவிகளை செய்தார்.

பின் கலந்துரையாடலின் போது, தூய்மை பணியை எவ்வித தொய்வின்றி நல்லமுறையில் பணியாற்றுவதை மனதார ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் பாராட்டுகிறேன் இப்போது பணியாற்றுவதை போல் எப்போதும் பணியாற்றி அனைத்து பகுதிகளிலும் முழுமையான தூய்மையை கடைபிடிக்கும் வகையில் ஓற்றுமையுடன் களப்பணியாற்றி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு தூய்மை காவலர்கள் பெருமையை பெற்றுத்துரவேண்டும் என்று பேசினார். ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, ஊராட்சி செயலாளா் ஜெயக்குமார், உள்பட தூய்மை காவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனா்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )